தொலைக்காட்சி நிறுவனங்கள் பல இருக்கின்றன அவற்றில் பல தொலைகாட்சியில் எப்படியாவது முதலிடத்தை பிடிக்க வேண்டும் என ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதிலும் இயர்கையை தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தங்களுடைய டிஆர்பி தரத்தை நிலைநாட்டிக் கொள்வார்கள்.
அதிலும் சன் தொலைக்காட்சி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் என பல்வேறு தொலைக்காட்சிகளும் டிஆர்பியை தக்கவைத்துக்கொள்ள சீரியலை தான் மலைபோல் நம்பி இருக்கிறார்கள். அதிலும் ஒரு சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி டி ஆர் பி யில் முதலிடத்தை பிடித்து விடுகிறது.
அதற்கு காரணம் அந்த சீரியலில் நடிக்கும் ஹீரோ மற்றும் ஹீரோயினை ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்து விடுவதால் தான். இந்த நிலையில் barcindia என்ற இணையதளத்தில் வாரம்தோறும் இந்தியா முழுவதும் ஒளிபரப்பி வரும் டிவி நிகழ்ச்சிகளில் டிஆர்பி ரேட்டிங்கை பட்டியலிட்டு வெளியிட்டு வருகிறார்கள்.
அப்படி தான் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை உள்ள நிகழ்ச்சியை டிஆர்பி ரேட்டிங் வெளியிட்டார்கள் அதில் முதல் 5 இடத்தை பிடித்துள்ளது தமிழ் தொலைக்காட்சியில் அதாவது முதல் இடத்தில் சன் டிவி சீரியல் ரோஜா இடம்பெற்றுள்ளது அதேபோல் டாப் 5 சேனலில் சன் டிவிதான் அதிகமாக இருக்கிறது.
எத்தனை புதுப்புது சீரியல் வந்தாலும் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ரோஜாசீரியல் தான் இது தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் பிரியங்க நல்கரி சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றை கொடுத்தார் அந்த பேட்டியில் ரோஜா சீரியலுக்கு எந்த சீரியல் தற்போது போட்டியாக கொடுக்கிறது என கேள்வி கேட்கிறார்கள்.
அதற்கு பிரியா நல்காரி செம்பருத்தி சீரியல் என கூறினார். ஆனால் செம்பருத்தி சீரியல் முதல் 5 இடத்தில் இடமே பிடிக்கவில்லை செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்தி எப்பொழுது விலகினாரோ அன்றிலிருந்து அந்த அந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.