தற்போதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலமடைந்து விடுகிறார்கள். அந்தவகையில் ரசிகர்கள் மத்தியில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர்கள் நடிகை சபானா மற்றும் ஜனனி.
இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.நடிகை ஜனனி இதற்கு முன்பே சில சீரியல்களில் நடித்துள்ளார்.நடிகை ஷபானா தான் செம்பருத்தி சீரியலில் மூலம் புதிதாக அறிமுகம் ஆனார்.
இவர் புதிய நடிகை என்றாலும் ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்தார்கள். அந்த வகையில் தற்போது உள்ள சின்னத்திரை முன்னணி நடிகைகளில் ஒருவராக சபானாவும் திகழ்கிறார்.
ஆனால் ஜனனி இந்த சீரியலில் நடிக்கும் பொழுது சில பிரச்சனையினால் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்பொழுது இவர் நாம் இருவர் நமக்கு இருவர் செரியலில் நடித்து வருகிறார்.
அவ்வபோது ஜனனி செம்பருத்தி சீரியலில் நடித்துவரும் சபானா மற்றும் கதிரை நேரில் சந்தித்து உள்ளார்.அவ்வபோது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.இதோ அந்த புகைப்படம்.