திருமணமான கையோடு விவாகரத்தில் இறங்கிய செம்பருத்தி சீரியல் நடிகை..! அதிர்ச்சியான சின்னத்திரை வட்டாரம்..!

sembaruthi

தற்போது திரை உலகில் இருக்கும் பல்வேறு பிரபலங்களும் திருமணம் செய்து வருகிறார்கள் அந்த வகையில்  பல்வேறு பிரபலங்களும் காதல் திருமணம் செய்து வருவது வழக்கமாகிவிட்டது இந்நிலையில் சமீபத்தில் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா மற்றும் பாக்கிய லட்சுமி சீரியல் நடிகர் ஆர்யண் சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டார்கள்.

ஆனால் இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்த தன் காரணமாக இவர்களுடைய இரு வீட்டார்களும் இவர்களுடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வில்லை.  இவ்வாறு பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு திருமணமாகி சில மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது.

இந்நிலையில் திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் அவர்களுக்கு தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  மேலும் ஆரியன் வீட்டில் ஷபானா இதுவரை செல்லவில்லை என பிரபல முன்னணி மீடியாவில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவர்கள் இருவரும் ஹனிமூன் சென்றுள்ளார்களாம் ஆனால் இவர்கள் சென்ற போது பாதி வழியிலேயே மீண்டும் திரும்பி விட்டதாக தெரிய வந்துள்ளது அதுமட்டுமில்லாமல் சில தினங்களுக்கு முன்பு ஷபானா  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார்.

இதுவரை அவர் வெளியிட்ட பதிவைப் பார்த்தால் கண்டிப்பாக இவர்களுடைய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை இருப்பது நன்றாகவே தெரிகிறது. இதை பார்க்கும்போது இவர்கள் இருவரும் பிரிய போகிறார்களா அல்லது இது வதந்தியா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.