தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பல சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு சில சீரியல்கள் மட்டும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.
அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று டிஆர்பி தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்த சீரியல் தான் செம்பருத்தி. அதோடு இந்த சீரியலின் வெற்றிக்கு முதல் காரணம் ஆதி மற்றும் பார்வதி கேரக்டர் தான் இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது.
அந்த வகையில் கார்த்திக் மற்றும் சபானா இவர்களின் கெமிஸ்ட்ரி மிகவும் அருமையாக அமைந்ததால் இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்தது. இப்படிப்பட்ட நிலையில் தான் கார்த்திக் இந்த சீரியலில் இருந்து விலகினார் இவருக்கு பதிலாக புதுமுக நடிகரை அறிமுகப்படுத்தினார்கள்.
ஆனால் இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பி இடம்பெறவில்லை. அதோடு ரசிகர்களும் இதுவரையிலும் இருந்த அழகான காட்சிகளே போதும் இதற்கு மேல் இந்த சீரியலை ஒளிப்பரப்பாதீர்கள் என்று கேட்டு வந்தார்கள் ஆனால் இந்த சீரியலின் குழுவினர்கள் மீண்டும் டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வர முடியும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து இந்த சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போழுது தமிழ்நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகமாக பரவி இருப்பதால் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சீரியலின் ஷூட்டிங்கை வேறு மாநிலத்தில் நடத்தி வருகிறார்கள்.
ஆம், அதற்காக தற்பொழுது ஹைதராபாத் சென்றுள்ளார்கள் அங்கு ஷபானா, கதிர் ஆகியோர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.