தமிழ்நாட்டில் உள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் என போற்றப்பட்டவர் தான் சீமான். இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக பணியாற்றியவர். இவ்வாறு திரைப்படங்கள் இயக்கும்போது சில திரைப் படங்களில் கதாநாயகனாகவும் இவர் நடித்துள்ளார்.
அதன் பின்னர் அரசியலில் மிக தீவிரமாக இறங்கிய சீமான் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது நடிகர் சீமான் வழிநடத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமூகவலைத்தள பக்கத்தில் சர்ச்சைக்கு பெயர் போன நாயகனாகவும் கூறப்படுகிறார்.
நடிகர் சீமான் கூட்டத்தில் பேசும்போது சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாத வார்த்தைகளை விடுவது மட்டுமல்லாமல் அவற்றை அனைத்தையும் வைரலாக்கி விடுவார் இந்நிலையில் நமது சீமான் அவர்கள் சத்யராஜ் நடித்துள்ள அமைதி படை என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் பாரதிராஜாவிற்கு உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
இவ்வாறு உதவி இயக்குனராக பணியாற்றிய சீமான் அவர்கள் 1996ஆம் ஆண்டு பிரபுவை வைத்து பாஞ்சாலங்குறிச்சி என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வீரநடை, தம்பி, வாழ்த்துக்கள், இனியவளே போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கிய சீமான் அவர்கள் அதன்பிறகு எந்த ஒரு திரைப்படத்தையும் இயக்கவில்லை.
இவ்வாறு சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துகொண்ட சீமான் அவர்கள் தன்னுடைய பிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அப்போது அவர் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்பொழுது தொகுப்பாளர் ஒருவர் சீமானிடம் பேட்டி எடுத்துள்ளார்.
Annanukku Veri Aachuna 1000 poduvaaraam #Seeman Fitness pic.twitter.com/eZhK7JK22C
— chettyrajubhai (@chettyrajubhai) July 28, 2021
அப்பொழுது சீமான் அவர்கள் ஒரே நேரத்தில் 100 போடுவேன் சில சமயம் வெறியேறிவிட்டால் ஆயிரம் தடவை கூட போடுவேன் என கூறியது சமூகவலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி விட்டது.