செல்வராகவனின் பாகாசுரன் படத்தின் சென்சார் அப்டேட்.! ரிலீஸ் தேதி இதோ..

bakasuran

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் பல பாடங்களை இயக்கி அது மட்டுமல்லாமல் சில படங்களில் நடித்தும் வருகிறார்.  இயக்குனர் செல்வராகவன் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு நடிகராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இதனை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணி காயிதம் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிகாட்டியிருப்பார். இந்த திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்த அடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் பெரும் தோல்வியை அடைந்தது. அதன் பிறகு தற்போது இயக்குனர் செல்வராகவும் படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் தற்போது பாகாசூரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் தற்போது திரையரங்கிற்கு வெளிவர காத்திருக்கிறது.

இதனை அடுத்து இந்த திரைப்படத்தின் சென்சார் அப்டேட் தற்போது வெளியாகியிருக்கிறது அதாவது பாகாசுரன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் பாகாசுரன் திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாக இருப்பதாகவும் பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது அந்த வகையில் சென்சார் போர்டு இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதும் ரசிகர்கள் இந்த படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

செல்வராகவன் ஒரு நல்ல இயக்குனரை தாண்டி தற்போது ஒரு சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்று பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

bakasuran
bakasuran