தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்குவது மட்டுமல்லாமல் தற்போது படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். அப்படி இவர் பீஸ்ட், சாணி காகிதம், நானே வருவேன், போன்ற சில திரைப்படங்களில் நடித்து வரும் செல்வராகவும் தற்போது பாகாசுரன் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ஜி அவர்கள் இயக்கி உள்ளார். ஏற்கனவே இவர் இயக்கிய த்ரோபதி மற்றும் ருத்ரதாண்டவம் திரைப்படங்கள் வசூல் ரீதிகாய வெற்றி பெற்றது ஆனால் விமர்சன ரீதியாக கடுமையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது.
இந்த நிலையில் மோகன் ஜி இயக்கி உள்ள பகாசுரன் திரைப்படத்தில் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இதை தொடர்ந்து செல்வராகவும் நடிக்கும் பரகாசுரன் திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் அமைந்துள்ள ஒரு பாடலும் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் பாகாசுரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு நேற்று அறிவித்திருக்கிறது. சமூகப் பிரச்சனையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் நல்லா எதிர்பார்ப்பு இருக்கிறது அந்த வகையில் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு இணங்க இன்று பாகாசுரன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
படக்குழு அறிவித்தது போல பாகாசூரன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. அதில் செல்வராகவன் தப்பு செய்யும் கொலையாளிகளை அரக்கத் தனமாக பல சம்பவங்களை செய்கிறார். பாகாசுரன் படத்தில் திரில்லர் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாத வகையில் இந்த திரைப்படம் அமைந்துள்ளதாக ட்ரைலர் மூலம் தெரிகிறது.
இதோ பாகாசுரன் படத்தின் டிரைலர்.!