ஆயிரத்தில் ஒருவன் – 2 படம் குறித்து பேசிய செல்வராகவன் – வெளிவந்த புதிய அப்டேட்.! குஷியில் ரசிகர்கள்.

aayirathil-oruvan
aayirathil-oruvan

செல்வராகவன் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் கால் தடம் பதித்தாலும் அண்மைக்காலமாக அதையும் தாண்டி நடிக்கவும் செய்து வருகிறார். இதனால் செல்வராகவனின் சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் செல்வராகவன்.

தனது தம்பி தனுஷ் உடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் வெகு விரைவிலேயே வெளிவர ரெடியாக இருக்கிறது அதற்கு முன்பாக நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது.

மித்திரன் ஜவகர் இந்த படத்தை இயக்கியுள்ளார் இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து நித்தியா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் போன்ற நடிகைகள் நடித்துள்ளனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது படம் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது.

அதற்கு முன்பாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் செல்வராகவனும் கலந்து கொண்டார் அப்பொழுது அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது பாகம் குறித்தும் கேட்டனர் அதற்கு அவர் பதில் அளித்தது.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் அப்டேட் அடுத்த மாதத்தில் கன்ஃபார்மாக உங்களுக்கு வெளிவரும் என கூறி அதிர வைத்தார். இந்த படத்திற்கு முன்பாக செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகி உள்ள நானே வருவேன் திரைப்படம் வெளிவர இருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி உள்ளதால் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.