தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வருபவர் செல்வராகவன். ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களை எடுத்து வெற்றி கண்ட இவர் போக போக வித்தியாசமான கதைகளை இயக்க ஆரம்பித்தார். அதில் ஆயிரத்தில் ஒருவன் படத்தை தவிர வேறு எந்த படமும் அவருக்கு பெரிசாக கை கொடுக்கவில்லை..
கடைசியாக வெளிவந்த நானே வருவேன் படம் கூட தனுஷ் நடிப்பு சிறப்பாக இருந்தது தவிர கதைக்களம் அந்த அளவுக்கு பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்குவதை கைவிட்டு விட்டு படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டினார். பீஸ்ட், நானே வருவேன் படத்தை தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பகாசூரன்..
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். பிப்ரவரி 17ஆம் தேதி தனுஷின் வாத்தி படத்தை எதிர்த்து பகாசூரன் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் பேட்டி ஒன்றில் செய்தியாளர்களின் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
செல்வராகவனை பார்த்து அடுத்து என்னென்ன படத்தில் நடிக்க போகிறீர்கள் என கேட்க.. அப்போ நான் டைரக்ட் பண்ண வேண்டாமா என சிரித்துக் கொண்டு சொல்லி உள்ளார். உடனே பத்திரிக்கையாளர்கள் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் என்ன ஆச்சு சார் என கேட்க.. போய்க்கொண்டிருக்கிறது சீக்கிரம் பெரிய அப்டேட் வரும் கொஞ்சம் பொறுமையா வெயிட் பண்ணுங்க என இயக்குனர் சொல்வாராக அவன் கூறியுள்ளார்.
இவர் சொல்வதைப் பார்த்தால் ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாகுவதில் தாமதம் ஏற்படும் அதற்கு ஏற்றார் போல நடிகர் தனுஷும் தற்பொழுது வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து கேப்டன் மில்லர், தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா உடன் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.