மணிரத்தினம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட நெடு நாவலான இந்த பொன்னியின் செல்வன் கதை பல முயற்சிகளுக்குப் பிறகு மணிரத்தினம் இதனை படமாக உருவாக்கியுள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்டர் பிரமோஷன் பணிகளும் முடிந்துள்ளது மேலும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆவதாக முடிவு எடுத்துள்ளார்கள். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்கின்ற நாவலில் உள்ள ராஜராஜ சோழனின் பெருமைகளை குறித்து வகையில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.
இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது இப்படிப்பட்ட நிலையில் கலந்த 2019ஆம் ஆண்டு சோழரின் பெருமையை குறிக்கும் வகையில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தினை செல்வராகவன் இயக்கி இருந்தார் என்பதும் இந்த படம் ரிலீசின் பொழுது பெரும் வரவேற்பு பெறவில்லை என்றாலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மிகவும் அருமையாக இருப்பதாகவும் பலரால் பாராட்டப்பட்டது.
எனவே செல்வராகவன் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.இந்நிலையில் பொன்னியின் செல்வன் குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் செல்வராகவன் அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்திக் நடித்த முத்து கேரக்டரை பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள வந்தியதேவன் கேரக்டரை பார்த்துதான் உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன் முத்து கேரக்டரையிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் உள்ள வந்திய தேவன் கேரக்டரிலும் நடிகர் கார்த்திக்கே நடித்துள்ளார் இது அபூர்வ ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது.