அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்.!

selvaraghavan
selvaraghavan

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு மாறுபட்ட கதைகளை வைத்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைபடங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மேலும் தனது தம்பி தனுசை வைத்து சமீபத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் செல்வராகவன்.

இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிருக்கு வரையறுப்பை பெறாதால் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது இதனை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கி வரும் செல்வராகவன் இயக்குனராக மட்டுமல்லாமல் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்து வருகிறார்.

அப்படி இவர் நடிப்பில் வெளியான சாணி காகிதம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார் அதனால் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்ய போகிறாரா செல்வராகவன்? என்றும் சில சர்ச்சைகள் எழுந்துள்ளது.

ஏற்கனவே சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்ட செல்வராகவன் சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் அதன் பிறகு தற்போது கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கீதாஞ்சலியை விவாகரத்து செய்யப் போகிறாரா செல்வராக்வன் என்று பல சர்ச்சைகள் எழுந்துள்ளது அதற்கு ஒரேடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறும் வகையில் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.