‘மயக்கம் என்ன’ படத்தில் தனுஷை வைத்து அன்றே கணித்த செல்வராகவன்.! வைரலாகும் ரசிகர் ட்வீட்..

dhanush
dhanush

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான படைப்புகளில் ஏராளமான படங்களை உருவாக்கி வருபவர் தான் இயக்குனர் செல்வராகவன் இவரைப் பற்றி ‘அன்றே தலைவன் செல்வராகவன் கனித்தார்’ என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டு ட்வீட் ஒன்றை வெளியிட்டு இருக்கும் நிலையில் தற்பொழுது அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

எழுத்தாளராக சினிமாவிற்கு அறிமுகமான இவர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவருடைய முதல் திரைப்படமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றினை பெற பிறகு இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களை இயக்கி வெற்றியினை கண்டார்.

தற்பொழுது இயக்குனராக மட்டுமல்லாமல் தொடர்ந்து சில திரைப்படங்களில் ஹீரோவாகவும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து கலக்கி வருகிறார். அந்த வகையில் செல்வராகவன் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த சாணி காகிதம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை அடுத்து செல்வராகவன் தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தினை இயக்கி இருந்தார் இந்த படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

மேலும் சமீபத்தில் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் பகாசூரன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவை விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் செல்வராகவன் குறித்து ரசிகர் ஒருவர் ட்வீட் வெளியிட சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு மயக்கம் என்ன என்ற படம் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றது இந்த படத்தில் தனுஷ், ரிச்சா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

karthi
karthi

இந்த படத்தில் மூத்த புகைப்பட கலைஞர் ஒருவரால் பாதிக்கப்பட்டு கடைசியில்  சிறந்த புகைப்பட கலைஞருக்கான விருதினை தனுஷ் பெற்றிருப்பார். இதற்கு காரணம் அவருடைய மனைவி யாமினி தான் என்பது போல காட்டப்பட்டது மேலும் இந்த படத்தினை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் யாமினி போன்ற ஒரு மனைவி தனக்கு மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என கூறி வந்தனர்.

மேலும் இந்த படத்தில் தனுஷ் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் அதே பெயரில் தற்பொழுது நேஷனல் ஜியோகிராபி ஆண்டின் சிறந்த புகைப்படத்திற்கான விருதினை சென்னை சேர்ந்த கார்த்திக் சுப்பிரமணியர் வென்றிருக்கிறார். எனவே இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் ரசிகர் ஒருவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து செல்வராகவனை டேக் செய்து தலைவன் செல்வராகவன் மயக்கம் என்ன படத்தில் ஹீரோவிற்கு இந்த பெயரை வைத்திருப்பார் என்று நெருப்பை இமேஜ்களும், கைகூப்பி வணங்கும் இமேஜ்களையும் பதிவிட்டுள்ளார்.