வரலாற்று நாவல்களை மையமாக வைத்து உருவாகும் கதைகளுக்கு எப்பொழுதுமே மக்கள் அதிகம் ஆர்வம் கொடுப்பார்கள் அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் பல வருடங்களுக்கு முன்பு வரலாற்று கதை ஒன்றை எடுத்தார் அந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன் இந்த படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா மற்றும் பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இந்த படம் ஒரு சூப்பரான படம் தான் ஆனால் அதை மக்கள் ஆரம்பத்தில் கொண்டாட மறுத்துவிட்டனர். ஆனால் சிறு இடைவேளைக்குப் பிறகு ஆயிரத்தில் ஒருவன் படத்தைப்பற்றி புகழ்ந்து பேசி பலர் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர் ஒரு வழியாக இயக்குனர் செல்வராகவனும் மக்கள் மற்றும் ரசிகர்களின் ஆசையை தீர்க்கும்..
வகையில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது பாகம் 2024 ஆம் ஆண்டு வெளிவரும் எனக் கூறிய ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு இருந்தார். ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது பாகத்தில் முக்கிய ஹீரோவாக தனுஷின் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் செல்வராகவன் சமீபத்தில் ஒரே பேட்டி ஒன்றில் கொடுத்தார்..
அப்பொழுது நெறியாளர் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியான போது நாங்கள் கொண்டாடவில்லை அது எங்கள் தவறு தான் ஆனால் தற்பொழுது கொண்டாட ஆரம்பித்திருக்கின்றோம் இதை பார்க்கும் போது ஒரு படைப்பாளியாக உங்களுக்கு என்ன தோன்றுகிறது என கேள்வி எழுப்பினார் அதற்கு பதில் அளித்த செல்வராகவன்.
ஒரு படைப்புக்கான அங்கீகாரம் கிடைக்காத போது நிச்சயம் அது வருத்தத்தை கொடுக்கும் அப்படித்தான் ஆயிரத்தில் ஒருவன். இத்திரைப்படம் ரிலீஸ் ஆன போது கொண்டாடப்பட்டிருந்தால் நிச்சயம் ஆயிரத்தில் ஒருவன் இரண்டு, மூன்று, நான்கு பாகங்கள் என சென்று இருக்கும் என செல்வராகவன் கூறினார். இதை அறிந்த மக்கள் மற்றும் ரசிகர்கள் மிகப்பெரிய ஒரு தவறை செய்து விட்டோம் எனக் கூறி புலம்பி வருகின்றனர்.