தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் இணைந்த செல்வராகவன்.! அவரே கூறிய தகவல்..

dhanush-2
dhanush-2

தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது உலக அளவிலும் பிரபலமடைந்து இருப்பவர்தான் நடிகர் தனுஷ். இவரை அனைத்து நாட்டு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர் மேலும் தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் ஹாலிவுட், பாலிவுட் என பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவ்வாறு சினிமாவில் தனுஷ் வளர்ந்ததற்கு முக்கிய காரணம் இவருடைய அண்ணன் செல்வராகவன் தான்.

ஏனென்றால் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன், புதுக்கோட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட திரைப்படங்களில் தனுஷ் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றினை கண்ட நிலையில் தனுஷுக்கும் அடுத்தடுத்து மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் ஒன்றில் செல்வராகவன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் இயக்கத்தில் பா பாண்டி என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தன்னுடைய இரண்டாவது படத்தினை இயக்க இருப்பதாகவும், அந்த படத்தினை சன் பிரிக்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஆரம்ப கட்டப் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஷ்ணு விஷால்,  எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட இன்னும் சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நிலையில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம். மேலும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வராகவன் தனுஷ் இயக்க இருக்கும் படத்தின் முழு திரைக்கதையும் எனக்கு தெரியும், அந்தக் கதை மிகச் சிறந்த கதை என்று தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நான் நடிக்க விரும்புகிறேன் அந்த கேரக்டரை என்னால் மிகச்சரியாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் எனவே இந்த தனுஷ் இயக்கம் இருக்கும் அடுத்த படத்தில் செல்வராகவன் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திரைப்படம் வெளியானது. இதனை அடுத்து தற்பொழுது தனுஷின் வாத்தி மற்றும் செல்வராகவன் ஹீரோவாக நடித்திருக்கும் பகாசூரன் இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியான நிலையில் தற்போது வெற்றிகரமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.