பழைய குருடி கதவைத் திறடி என மீண்டும் பழைய பார்முக்கு வந்த செல்வராகவன்.! அட இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகமா.. அதுவும் ஹீரோ இவரா தலைவனுக்கு சுட்டு போட்டாலும் நடிப்பு வராதே…

selvaraghavan
selvaraghavan

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை இயக்கி தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர், இவர் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர் மத்தில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வந்தது. மேலும் செல்வராகவன் அவருடைய தந்தை கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளியாகிய துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

துள்ளுவதோ இளமை திரைப்படம் முழுக்க முழுக்க செல்வராகவன் இயக்கி இருந்தாலும் படத்தை எப்படியாவது மார்க்கெட் செய்ய வேண்டும் என்பதற்காக தன்னுடைய தந்தையின் பெயரை இயக்குனராக போட்டுக் கொண்டார். தான் இயக்கிய முதல் திரைப்படம் இளசுகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது அதனை தொடர்ந்து இவருக்கு பல திரைப்படங்கள் இயக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன் திரைப்படத்தை இயக்கினார் அது மட்டும் இல்லாமல் 7ஜி ரெயின்போ காலனி ஆயிரத்தில் ஒருவன் என பல திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டார். இவர் ரசிகர்கள் மத்தியில் நிலையான இயக்குனர் என்ற அந்தஸ்தை அடைந்தார். இவர் இயக்கிய புதுப்பேட்டை என்ற திரைப்படம்  தன்னுடைய காதல் திரைப்படமாக இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக இருந்தது.

மேலும் இப்படி தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் நடிக்க ஆசைப்பட்ட துண்டு. ஆனால் ஒரு சில காலகட்டத்தில் செல்வராகவன் திரைப்படம் பெரிதாக எடுபடவில்லை அதனால் தற்காலிகமாக படத்தை இயக்குவதை நிறுத்திக் கொண்டார் பின்பு நீண்ட காலம் கழித்து மீண்டும் தனுசை வைத்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

இதற்கு முன்பு வெற்றி பெற்ற திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்க செல்வராகவன் முடிவெடுத்துள்ளார். அந்த வகையில் மிகப்பெரிய ஹிட் அடித்த 7g ரெயின்போ காலனி என்ற திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை செல்வராகவன் எடுப்பதற்கு முடிவு செய்து அதன் வேலைகளை மிகவும் பரபரப்பாக தொடங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தை ஏ எம் ரத்தினம் தயாரித்திருந்தார் அந்த வகையில் இரண்டாம் பாகத்தையும் ஏ எம் ரத்தினமே தயாரிக்க இருக்கிறார்  அதேபோல் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் ஏ எம் ரத்தினத்தின் மகன் ரவி கிருஷ்ணா தான் ஹீரோவாக நடித்திருந்தார் அவருக்கு முதல் திரைப்படமே மிகப்பெரிய ஹிட் ஆனால் அதன் பிறகு அவர் பெரிதாக படத்தில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பதற்காக தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய தந்தை தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 7g ரெயின்போ காலனி இரண்டாவது பாகத்தில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுப்பதகா தகவல் கிடைத்துள்ளது