தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இயக்குனர் செல்வராகவன் இவர் எடுக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும் அதே சமயம் அந்த படம் வெளிவந்து வெற்றி பெறும் அதனால் இவரது படத்தை பார்க்கவே மிகப்பெரிய அளவில் ஒரு கூட்டம் இருக்கிறது.
செல்வராகவன் இதுவரை காதல் கொண்டேன், செவன் ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என் ஜி கே, நெஞ்சம் மறப்பதில்லை இப்பொழுது கூட நானே வருவேன் திரைப்படத்தை எடுத்து அசத்தி இருக்கிறார் . ஒரு பக்கம் இது இப்படி இருக்க மறுபக்கம் இயக்குனர் செல்வராகவன்.
சமீபகாலமாக நடித்தும் வருகிறார் இதுவரை பீஸ்ட், சாணி காயிதம், நானே வருவேன் மேலும் பாகசூரன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படி திரை உலகில் வெற்றியை மட்டுமே கண்டு வரும் செல்வராகவன் .. ஒரு சில காரணங்களால் ஒரு சில படத்தை எடுக்க வந்து பின் தவற விட்டுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் 2017 ஆம் ஆண்டு மன்னவன் வந்தானடி இயக்கினார்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சந்தனமாகவும், கதாநாயகியாக அதிதி போஹங்கர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை சுஷாந்த் பிரசாந்த் என்பவர் தயாரித்து இருந்தார் இந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிவடைந்தது தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த திரைப்படம் முழுமையாக முடியவில்லை எனினும் இந்த திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமம் சன் டிவிக்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து ஒரு புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது அதாவது சன் நிறுவனம் இந்த படத்திற்காக போட்ட ஒப்பந்தத்தை நிறுத்தி விடுமாறு கூறியிருக்கிறார்கள் மேலும் சன் நிறுவனம் தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுத்த அட்வான்ஸ் திருப்பி கேட்டுள்ளதாம். மன்னவன் வந்தானடி திரைப்படத்திற்கு அப்பொழுது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் இந்த திரைப்படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த திரைப்படம் இன்று வரை வெளிவரவில்லை..