தமிழ் திரை உலகில் வித்தியாசமான கதைகளை எழுதும் இயக்குனர்களில் ஒரு முக்கியமான இயக்குனர் என்றால் அது செல்வராகவன் தான் இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படமாக தான் திகழ்ந்து வருகிறது.
அதற்கு காரணம் இவர் தனது ரசிகர்களுக்கு நல்ல நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படத்தை இயக்குவதில் மிக ஆர்வம் காட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவரது இயக்கத்தில் ஒரு சில திரைப்படங்கள் தற்போது நடைபெற்று வருகிறது அந்த வகையில் பார்த்தால் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திரைப்படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார்.
இவரது திருமண வாழ்க்கையில் இவருக்கு துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த கீதாஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் தான் மூன்றாவது மகன் பிறந்தான்.
இதனை அடுத்து செல்வராகவன் தனது மூன்றாவது மகனை தமிழ் திரையுலகில் பணியாற்றி வரும் பிரபலங்களுக்கு காட்டும் வகையில் தனது மூன்றாவது மகனை தூக்கி வைத்திருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் செல்வராகவனை அச்சு அசலாக அப்படியே உரித்து வைத்து இருக்கிறார் இவரும் ஒரு இயக்குனராக வரலாம் என சமூக வலைதள பக்கங்களில் கூறி வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு செல்வராகவன் மகன் அவரை விட பல மடங்கு புத்திசாலியாகவும், திறமைசாலியாகவும் வலம் வருவார் என கூறி வருகிறார்கள்.