“பீஸ்ட்” படத்தில் மாஸ் காட்ட போகும் செல்வராகவன்.! புதிய கெட்டப்பில் மாறியிருக்கும் புகைப்படம் இதோ.

beast

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் மாஸ்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் உடன் முதல் முறையாக கைகோர்த்து பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தில் ஒவ்வொரு பிரபலமும் திறமையானவர்கள் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் கதைக்கு ஏற்றவாறு அசாதாரணமான திறமையை வெளிக்காட்ட கூடியவர்களாக இருக்கின்றனர். இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருக்கிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன், சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த சபீர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் காட்சிகள் வெளிநாட்டில் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சென்னை மற்றும் ரஷ்யாவில் எடுக்கப்பட இருக்கின்றன.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்க்ஷன் கலந்த படமாக இருக்கும் என தெரிய வருகிறது அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்ததிலிருந்து தெரியவந்துள்ளது. அதனால் வில்லன்களை சிறப்பாக தேர்வு செய்து உள்ளனர் செல்வராகவன் இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தாண்டி தற்போது நடித்தும் வருகிறார்.

சாணி காயிதம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கிய அவருக்கு அடுத்ததாக விஜயின் பீஸ்ட் படத்தில் நடிப்பது அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் படத்துக்காக தற்போது செல்வராகவன் தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு படத்தின் கதைக்கு ஏற்றவாறு மாறி வருகிறார்.

அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் தனது முகத்தை கிளீன் ஷேவ் செய்து கொண்டு இருக்கும் புதிய புகைப்படத்தை இணையதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அது தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

selvaragavan
selvaragavan