என்னடா நடிக்கிற நடிகர் தனுஷை பளார்னு அறைந்த செல்வராகவன்.. படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்

selvaragavan-dhanush
selvaragavan-dhanush

தமிழ் திரையுலகில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், விஜய், தனுஷ், சிம்பு போன்ற பலரும்  ஆரம்பத்தில் திரைப்படங்களில் ஹீரோவாக  நடிக்க கடின உழைப்பை போட்டு நடித்ததால் தற்போது டாப் நடிகர்களாக இருக்கின்றனர். அவர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் ஆரம்ப கட்டத்தில் ஆள் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக இருப்பதால் இவர் எல்லாம் ஒரு ஹீரோவா என பலரும் கேலி கிண்டல் செய்தனர்.

அப்போது தனுஷுக்கு பக்கபலமாக இருந்தது அவரின் அப்பா மற்றும் அண்ணன் செல்வராகவன் தான் இருந்தனர்.  தனுஷின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன, யாரடி நீ மோகினி போன்ற பல படங்களை இயக்குனர் செல்வராகவன் தான் இயக்கினார். அந்தப் படங்கள் அனைத்தும் தனுஷ் கேரியருக்கு முக்கிய படங்களாக மாறின..

நீண்ட வருடங்களுக்குப் பிறகு கூட தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன் திரைப்படம் வெளிவந்தன இந்த படமும் அவர்களுக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று கொடுத்தது. இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷ் மற்றும் செல்வராகவன் பற்றிய செய்தி ஒன்று இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு படம் இயக்கும்போது இயக்குனர் செல்வராகவன் தனுஷை கைநீட்டி அடித்து விட்டாராம்..

தனுஷ் மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படத்தில் தனுஷ் சிறப்பாக நடித்திருப்பார். அதற்கு முழு காரணம் செல்வராகவன் தான். தனுஷ் எப்படி நடிக்க வேண்டும் எத்தனை முறை கண்களை சிமிட்ட வேண்டும் என்பது வரை செல்வராகவன் தான் சொல்லிக் கொடுப்பாராம். இந்த படத்தில் ஒரு காட்சியில் தனுஷ் சோனியா அகர்வால் வீட்டிற்கு செல்லும்போது அந்த பிரம்மாண்ட வீட்டை பார்த்ததும் தனுஷ் ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

அந்த காட்சி படப்பிடிப்பாக்கப்படும் போது தனுஷ் சரியாக நடிக்கவில்லை கடுப்பான செல்வராகவன் ஷூட்டிங் ஸ்பாட்டிலே அனைவரும் முன்பும் தனுஷை ஓங்கி அறைந்து விட்டாராம். பின் தனுஷ் மற்றும் செல்வராகவனை படக்குழுவினர் சமாதானப்படுத்தி படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பரவி வருகின்றன.