வாவ் செல்வா அத்தான் செல்வராகவன் புகைப்படத்தை பார்த்து ஐஸ்வர்யா போட்ட பதிவு.! இதெல்லாம் தனுஷுக்கு தெரியுமா.?

aishwarya-dhanush

தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்கள் இருந்தாலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டு முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளியாகி பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன இவர் வேறு யாரும் கிடையாது தனுஷின் அண்ணன் தான்.

நீண்ட காலம் கழித்து தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் இணைந்து நானே வருவேன் என்ற திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள் இந்த திரைப்படத்தில் செல்வராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என தகவல் கிடைத்தது. மேலும் செல்வராகவன் கதாநாயகனாக சாணிக்காயிதம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் செல்வராகவன் கையில் துப்பாக்கியுடன் ஹீரோ போல் கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.

இந்த போஸ்டரை செல்வராகவனும் தன்னுடைய சமூக வலைதள பக்கம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் இதை பார்த்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த். வாவ் செல்வா அத்தான் என்னுடைய வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார். இதற்கு முன் ஐஸ்வர்யா செல்வராகவனின் பிறந்த நாளன்று நீங்கள் என்னுடைய தந்தை நண்பர் குரு என புகழ்ந்து ஒரு பதிவை வெளியிட்டார்.

இந்த நிலையில் தற்பொழுது செல்வா அத்தான் என கூறி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனுஷை விட்டுப் பிரிந்த ஐஸ்வர்யா செல்வராகவனுடன் நல்ல நட்பில் இருந்து வருவது அனைவருக்கும் தற்பொழுது  தெரிந்துள்ளது.

selvaragavan
selvaragavan