தனுஷ் என் தம்பி என்பதை நான் மறக்க வேண்டும் இயக்குனர் செல்வராகவன் அதிரடி பேச்சு.!

selvaragavan
selvaragavan

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வசனங்களை பெற்று வெற்றி பெற்றது.

செல்வராகவன் படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகிறார் அந்த வகையில் செல்வராகவன் நடிப்பில் சாணிக் காயிதம்  என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் அமேசான் OTT இணையதளத்தில் வெளியாகியது இந்த திரைப்படத்தில் செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது இந்த நிலையில் செல்வராகவன் தற்போது தனுஷ் அவர்களை வைத்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை வி  கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரித்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் பாடல்கள்  சூப்பர் ஹிட் அடையும் என பலரும் கூறி வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்க இருக்கிறார் எனவும்  தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் சமூக வளைதளத்தில் தகவல்கள் பரவின. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதி செய்யும் வகையில் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினருக்கு விளம்பரமாக வெளியிட்டது. அதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதியாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில்  நானே வருவேன் திரைப்படத்தின் இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் செல்வராகவன் கூறியதாவது 2 தேசிய விருது பெற்ற நடிகர் ஹாலிவுட் வரை சென்று இருக்கும் நடிகர் இவரை கையாள வேண்டும் என்றால் முதலில் நான் என்னுடைய தம்பி என்பதை மறக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் தனுஷ் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.