அஜித்தை வைத்து மூன்று திரைப்படத்தை இயக்க வேண்டியது.! ஆனா என் கெரகம் எல்லாமே மிஸ் ஆயிடுச்சு.! பேட்டியில் புலம்பி தள்ளும் பிரபல இயக்குனர்..

ajith-selvaragavan
ajith-selvaragavan

அஜித் உடன் மூன்று முறை இணைவதற்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் என்னால் அவருடன் இணைய முடியல என பிரபல இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அஜித் எச் வினோத் இயக்கத்தில் கடைசியாக துணிவு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் திரைப்படத்தில் நடிக்க இருந்தது ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக அந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை.

அதேபோல் துணிவு திரைப்படத்தில் கொள்ளையடிக்கும் விஷயத்தை மிகவும் கமர்சியலாக சொல்லி இருந்தார் வினோத், அதனால் வொர்க் அவுட் ஆகி மக்களும் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று படத்தை கண்டு களித்தார்கள் அதேபோல் துணிவு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது என அறிவித்திருந்தார்கள்.

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் லைக்கா நிறுவனத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை தான் விக்னேஷ் சிவன் இயக்க வேண்டியது ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விக்னேஷ் சிவன் வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக மகிழ்திருமேனி இந்த திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

அதேபோல் தமிழ் சினிமாவில் மகிழ் திருமேனி திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது அதனால் அஜித்தை வைத்து இயக்கும் இந்த திரைப்படமும் மாபெரும் ஹிட் அடிக்கும் எனவும் நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள். மேலும் AK 62 திரைப்படத்தின் அப்டேட் வெளியேறாமல் இருக்கும் நிலையில் அஜித் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படத்தின் தகவல்கள் இணையதளத்தில் கசிந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் அஜித் 63வது திரைப்படத்தை சன் பிக்ச்சர் தயாரிக்க இருப்பதாகவும் சிறுத்தை சிவா தான் அந்த திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் அஜித் கமர்சியல் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரை வேறொரு கோணத்தில் பார்க்க வேண்டும் என ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் அஜித் மாறுபட்ட முயற்சியால் வாலி, வில்லன், வரலாறு , சிட்டிசன் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் கிட்டடித்தது அதுமட்டுமில்லாமல் பாலா இயக்கிய நான் கடவுள் திரைப்படத்திலும் அஜித் தான் முதன் முதலில் நடிக்க வேண்டியது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் அஜித் வெளியேறினார்.

அப்படி இருக்கும் நிலையில் கமர்சியல் ரீதியாக திரைப்படத்தை எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் அஜித்தை மாறுபட்ட கதாபாத்திரங்களில் பார்க்க வேண்டுமென ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அப்படி இருக்கும் நிலையில் அஜித் செல்வராகவனோடு இணைந்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் பலரும் தங்களுக்குள் பேசிக் கொள்வதுண்டு இந்த நிலையில் அஜித் மற்றும் செல்வராகவன் இருவரும் இணைந்து பணியாற்றியது கிடையாது.

அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் செல்வராகவன் ஒரு பேட்டியில் அஜித்துடன் நான் மூன்று முறை இணைந்து பணியாற்றுவதற்கான சூழ்நிலை உருவானது ஆனால் தேதிகள் காரணமாக என்னால் அஜித் திரைப்படத்தை இயக்க முடியவில்லை. அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கினால் கண்டிப்பாக அஜித் அதில் அரசியல் தலைவராக காட்டி அந்தத் திரைப்படத்தை நான் இயக்குவேன் என செல்வராகவன் பேட்டியில் கூறியுள்ளது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.