“மாநாடு” திரைப்படத்தைப் பார்த்துவிட்டு மன்னிப்பு கேட்ட செல்வராகவன் – வைரலாகும் பதிவு.

selvaragavan-

2021 ஆம் ஆண்டு பல்வேறு டாப் நடிகர்கள் படம் வந்து வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றாலும் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம்தான் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மற்ற இயக்குனர்கள் கூட இந்த படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து பேசியது தான் இந்த படத்திற்கான உச்சகட்ட வரவேற்பு தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் தொடங்கி பல்வேறு பிரபலங்கள் இந்த பபடத்திற்கு தனது வாழ்த்துக்களை கூறிவந்தனர் அந்த அளவிற்கு படம் சிறப்பாக இருந்தது தான் உண்மை.

டைம் லூப்பை அடிப்படையாக கொண்டு  இதுவரை நாம் ஹாலிவுட் படங்களை தான் பெரிதும் பார்த்து இருப்போம் அது கூட நமக்கு சரியாக புரிந்து இருக்காது ஆனால் அப்படிபட்ட ஒரு திரைப்படத்தை வெங்கட் பிரபு தமிழில் கொடுத்ததே ஒரு விஷயம் அதையும் ஒரு தடவை பார்த்தாலே எளிதில் புரிந்து கொள்ளும்படி எடுத்து அசத்தினார்.

இந்தப் படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து  எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், மனோஜ், எஸ் ஏ சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், கருணாகரன், பிரேம்ஜி போன்ற பலர் நடித்து இருந்தனர் இந்த திரைப்படம் 100 கோடியைத் தாண்டி வசூலித்த உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் செல்வராகவன் இந்த திரைப்படத்தை சமீபத்தில் தான் பார்த்துள்ளார்.

மாநாடு படத்தைப் பார்த்துவிட்டு தனது சமூக வலைத்தளத்தில் சில பதிவுகளை அவர் பகிர்ந்துள்ளார் அதில் தாமதமாய் மாநாடு படம் பார்ப்பதற்கு மன்னிக்கவும் ரசித்து பார்த்தேன் சிலம்பரசன், எஸ். ஜே  சூர்யா அருமை நண்பர்கள் யுவன் ராஜா வெங்கட், பிரபு மற்றும் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் இது விடாமுயற்சி அயராத உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என பதிவிட்டிருந்தார்.

maanaadu
maanaadu