செல்வராகவன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியானது.! ஹீரோவாக மனுஷன் மிரட்டுறாரே

selvaragavan-keerthi-suresh
selvaragavan-keerthi-suresh

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர்களில் இயக்குனர் செல்வராகவனுக்கு தனியிடமுண்டு, செல்வராகவன் இயக்கும் திரைப்படத்தை காண ரசிகர் கூட்டம் அலைமோதும் ஏனென்றால் அந்த அளவு தான் இயக்கும் திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு அதீத நம்பிக்கை.

இயக்குனர் செல்வராகவன் இயக்குனராக இருந்தபோது பல நடிகர் மற்றும் நடிகைகள் ஆட்டி வைத்தவர், இந்த நிலையில் தற்போது முதன் முதலாக ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

இயக்குனராக காதல் கொண்டேன் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் என ஒவ்வொரு திரைப்படத்திற்கும் மாறுபட்ட வித்தியாசத்தில் கதை இயக்கியிருந்தார், இவர் திரைப்படம் ஒவ்வொன்றும் வித்தியாசமாக தான் இருக்கும்.

அதேபோல் ஒரு திரைப்படத்திற்கும் மற்றொரு திரைப்படத்திற்கும் எந்த ஒரு சாயலும் இருக்காது, பல ஆண்டுகளாக புகழ்ந்து தள்ளும் படி இவர் இயக்கிய திரைப்படங்கள் அமைந்துள்ளன இந்த நிலையில் அடுத்ததாக தனுஷை வைத்து புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது அதை உறுதி செய்யும் வகையில் செல்வராகவனும் கதை எழுதி வருவதாக தெரிவித்தார்.

இந்தநிலையில் செல்வராகவன் ஹீரோவாக சாணி காகிதம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை கிரீன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது, கடந்த ஆகஸ்ட் மாதம் படத்தின் ஃபர்ஸ்ட்லக் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருவரும் திரும்பி நிற்பது போல் அமைந்து இருந்தது ஆனால் செகண்ட் லுக் போஸ்டரில் இருவர் முகத்தையும் பார்க்கும்படி அமைந்துள்ளது.

selvaragavan
selvaragavan