மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.இவ்வாறு நந்தினி கதாபாத்திரத்திற்கு பிரபல சீரியல் நடிகை டப்பிங் கொடுத்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 20 ஆண்டு காலங்களாக பொன்னியின் செல்வன் கதையினை படமாக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து தற்பொழுது பல கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக மணிரத்தினம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தினை எடுத்துள்ளார்.
இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் ஏஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஜெயராம் மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லக்ஷ்மி, திரிஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாள்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.
பான் இந்திய படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. தற்பொழுது இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ள நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் டீசர், ட்ரெய்லர் ,பாடல்கள் என அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது தற்பொழுது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இதில் கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ட்ரெய்லர் வெளியாகி உள்ள நிலையில் அதற்கு தமிழில் நடிகர் கமலஹாசன் அவர்கள் தான் குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்பொழுது நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்துள்ள சீரியல் நடிகையை பற்றி தகவல் வெளியாகி உள்ளது அதாவது பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் நந்தினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.
இவ்வாறு நந்தினி கெரெக்டருக்கு டப்பிங் கொடுத்தது வேறு யாரும் இல்லை டப்பிங் ஆர்டிஸ்ட்டும், சீரியல் நடிகையுமான தீபா வெங்கட் தான். இது குறித்து அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, பொன்னியின் செல்வன் படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
மேலும் முதன்முறையாக ஐஸ்வர்யாராய்க்கு டப்பிங் கொடுத்துள்ளேன். இதற்கு மணிரத்தினம் சாருக்கு தான் என்னுடைய நன்றியை கூற வேண்டும் என இவர் பதிவிட்டுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தீபா வெங்கட் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.