தமிழ் படம் கிடையாதா பொன்னியின் செல்வன்.? பிரபல் நடிகையால் மணிரத்தினத்துக்கு ஏற்பட்ட புதிய பிரசனை…

ponniyin-selvan
ponniyin-selvan

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் சுகாசினி அவர்கள் பேசி உள்ளது தற்போது சர்ச்சைகளை கிளப்பி உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் கல்கியின் புகழ்பெற்ற நாவலை தழுவி அதே தலைப்பில் படமாக உருவாக்கி வெளியிடுவதற்கு தயாராக உள்ளது இதனால் திரை பிரபலங்களும் ரசிகர்களும் எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த படத்தில்  விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய்,ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான், உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் அந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள் மேலும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார்.

மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பலமொழிகளில் வெளியாக. இந்த படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்தினம். முதல் பாகம் வருகின்ற 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து தற்போது படத்தின் பிரமோஷன் பணிகள் படும் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சுகாசினி மணிரத்தினம் அவர் பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் கூறியதாவது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் தான் அதிகம் நடந்துள்ளது தமிழகத்தில் வெறும் பத்து நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடைபெற்றது எனவே இது தெலுங்கு மக்களின் படம் இப்படத்தை நீங்கள் தான் வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இதனைக் கண்ட ரசிகர்கள் படத்தின் பிரமோஷன்காக நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவீங்களா.? படம் நல்லா இருந்தா மக்கள் பார்க்க போகிறார்கள் என்று சுகாசினியை ஏடாகூடமாக விலாசி தள்ளுகிறார்கள் ரசிகர்கள்.

இதோ அந்த வீடியோ..