Selvaraghavan :ஒரு படம் எடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல இயக்குனர் படாதபாடு படுவார். அவர் நினைக்கின்ற மாதிரி அந்த கதாபாத்திரம் வர வேண்டும் சற்று சோதப்பினாலும் கூட படம் தோல்வியை நோக்கி போய்விடும் இதனால் ஒவ்வொரு இயக்குனர்களும் தனக்கு பிடித்த மாதிரி நடிப்பு வரும் வரை விடவே மாட்டார்கள் ஒரு சில இயக்குனர்கள் ரொம்ப கோபப்பட்டு அடிக்கவும் சென்று விடுவார்கள்.
பாலா அப்படிப்பட்டவர் தான் தனக்கேத்த நடிப்பு வரம் வரை எத்தனை டேக்கள் வேணாலும் போவார் கோபப்பட்டு விட்டால் கையில் இருக்கிறது எடுத்து ஹீரோ ஹீரோயின் என்றெல்லாம் பார்க்காமல் அடித்து விடுவார் அவரைப் போலவே தான் செல்வராகனும் கோபம் வந்துவிட்டால் வெளுத்து விடுவாராம் அப்படியே செல்வராகவனிடம் அடி வாங்கிய நடிகர் நடிகைகளை பற்றி விலாவாரியாக பார்ப்போம்..
1. ஆயிரத்தில் ஒருவன் : படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்து வந்தனர் இந்த படத்தின் ஒரு காட்சியில் ரீமாசென், ஆண்ட்ரியா நடித்த காட்சி பிடிக்கவில்லையாம் இதனால் கோபமடைந்த செல்வராகவன் கையில் இருந்த மை கையில் தூக்கி போட்டாராம் அதோட மட்டுமல்லாமல் நடிகை ஆண்ட்ரியா சரியாக நடிக்கவில்லை அடியும் வாங்கியிருக்கிறாராம். இப்படி அடி வாங்கி அடி வாங்கி தான் கொஞ்சம் கொஞ்சமாக தனது நடிப்பு திறமையை வளர்த்து ஆண்ட்ரியா இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
துள்ளுவதோ இளமை : இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஷெரின் நடித்திருப்பார் இந்த படத்தின் ஷூட்டிங்கில் ஷெரின் நிறைய திட்டுக்களும் அடிகளும் வாங்கியிருக்கிறாராம். மயக்கம் என்ன : தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமானவர் ரிச்சா இந்த படத்தில் அவருடைய காட்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக செல்வராகவன் அவரை அடித்து சிறப்பான நடிப்பை எடுத்தாராம்.
காதல் கொண்டேன் : இந்த லிஸ்டில் தனுஷும் இருக்கிறார் காதல் கொண்டேன் படப்பிடிப்பின் போது ஒரு காட்சி சரியில்லையாம் செல்வராகவன் வந்து தனுஷை அறைந்தாராம். இவர்களைப் போலவே சோனியா அகர்வாலையும் திட்டும் அடியும் வாங்கி இருக்கிறார் இப்படி அடி வாங்கிய நடிகர், நடிகைகள் அனைவருமே இன்று மிகப்பெரிய திறமையானவர்களாக வளர்ந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.