“வாரிசு” படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட செல்பி புகைப்படம் – ராஷ்மிகாவுடன் யார் இருக்கிறார் பாருங்கள்.!

varisu
varisu

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 66 ஆவது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார் பிரம்மாண்ட பொருட் செலவில் தில் ராஜு தயாரிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம், குஷ்பூ, ஜெயசுதா, ரஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து வருகின்றனர் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப கதையை மையமாகக் கொண்டு உருவாகும் என தெரிய வருகிறது.

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு பட குழு அடுத்த அடுத்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது போய்க்கொண்டிருக்கிறது அதே சமயம் இந்த ஷூட்டிங்கில் இருந்து  படத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவை வெளிவந்த வண்ணமே..

இருப்பது படகுழுவை எரிச்சலடைய வைத்துள்ளது விஜய் செம கோவத்தில் இருக்கிறாராம் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தால் அந்த செட் எப்படி இருக்கிறது அதில் பிரபலங்களின் கதாபாத்திரம் என்ன என்பது யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதில் ரொம்ப கவனமாக இருப்பார்.

ஆனால் வாரிசு படத்திலிருந்து மட்டும் தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன தற்பொழுது கூட ராஷ்மிகா மந்தனாவுடன் படப்பிடிப்பு தளத்தில் நடிகை சங்கீதா இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார் அந்தப் புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

varisu
varisu