சினிமா மீது கொண்ட காதலால் பலரும் நடிக்க வருகின்றனர் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அவர்கள் அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்க வேண்டியதாக இருக்கிறது அப்படி ஒரு சிலர் அரசியலில் கால் தடம் பதிக்கின்றனர். அந்த வகையில் நடிகர் எம்ஜிஆர் முதலில் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
ஒரு இடத்தில் அரசியலில் இறங்கினார். தொடர்ந்து வெற்றிகளை கண்டு பல வருடங்கள் முதலமைச்சராக பணியாற்றினார் இவரை தொடர்ந்து தற்பொழுது கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்தி ஆகியோர்களை தொடர்ந்து ரஜினியும் வர யோசித்து பின் விலகினார் இவரை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் தனது ரசிகர்களை மக்கள் இயக்கமாக மாற்றி..
பல நலத்திட்ட உதவிகளை ஆரம்பத்தில் செய்து வந்த நிலையில் தற்போது அதை அரசியல் பக்கமும் திருப்ப ஆரம்பித்துள்ளார். அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து வருயுள்ள அடுத்தடுத்த தேர்தலிலும் நிற்க வைக்க பல முயற்சிகளை விஜய் எடுத்து கூறுவதாக பல கிசுகிசுக்கள் பரவுகின்றன.
இதனை அறிந்த பலரும் விஜய்க்கு ஒரு பக்கம் ஆதரவும் எதிர்ப்பும் வந்தனர். மேலும் அரசியலை எப்படி பார்க்க வேண்டும் என்பது குறித்தும் பல அறிவுரைகளை கொடுத்து வருகின்றனர் இந்த நிலையில் செய்யாறு பாலு பேசியது வைரலாகி வருகிறது பொதுவாக அரிசிகளுக்கு வரும் நோக்கம் உள்ளவர்கள் சமூக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்..
அரசியல் ரீதியாக ஒரு அநீதி நடக்கும் போது அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஆனால் ஒருபோதும் விஜய் அவற்றை செய்வதில்லை.. விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அதை எல்லாம் செய்தார் ஆனால் அந்த தைரியம் விஜய்க்கு இல்லை.. அப்படியான எதிர்ப்புகளை தெரிவிக்காத வரை அவர் பெரும் அரசியல்வாதி ஆவது கடினமே..