விஜய் ஒரு தொடை நடுங்கி.. சுவர் ஏறி குதித்து ஓடுனாரு.! இத மட்டும் எப்படி சமாளிக்க போறாரு..

vijay

Vijay : திரையில் வெற்றி கண்ட பலரும் ஒரு கட்டத்தில் அரசியலில் களம் இறங்குகின்றனர்.  அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா, கமல், கார்த்தி, சரத்குமார் போன்றவர்களை தொடர்ந்து அரசியலில் குதிக்க அதிக அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் தளபதி விஜய்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து கொடுத்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் அதை மக்கள் இயக்கமாக மாற்றி  பலதட உதவிகளை செய்து வந்தார் திடீரென கடந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கத்தினர் போட்டி போட்டு வெற்றி பெற்றனர்.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் நுழைய காய் நகருக்கு வருகிறார் விஜய். அது இப்ப வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளதால் விஜய் அரசியலில் எப்படி இருக்க வேண்டும் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து பலரும் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர் இந்த சூழலில் செய்யாறு பாலு  நடிகர் விஜய் பற்றி பேசியது தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது.

விஜய் அரசியலுக்கு வருவது என்பது அவருக்கே உள்ளுக்குள்ள கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது. காரணம் விஜய் பெரிய கூட்டத்தை பார்த்தால் பயந்து விடுவார் தன் ரசிகர்களே லட்ச கணக்கில் கூடிவிட்டால் அங்கிருந்து எப்படி பாதுகாப்பாக வெளியேறுவது என படபடத்துப் போய்விடுவார் அப்படித்தான் பாண்டிச்சேரியில் ஒரு சம்பவம் நடந்தது.

seiyyaru balu
seiyyaru balu

விஜயின் அரசியல் ஆசானாக அவரது நிழலாக அவருடைய இன்னொரு மனசாட்சியாக இருக்கும் புஸ்ஸி ஆனந்தின் மகள் திருமணத்திற்கு விஜய் சென்று இருந்தார். பெரும்பாலும் விஜய் பொது நிகழ்ச்சிகளுக்கு போகவே மாட்டார் ஆனால் அன்று பல முன் ஏற்பாடுகளுடன் தான் சென்று இருந்தார்.

இருந்தும் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து திணறிப் போன விஜய் சுவர் ஏறி குதித்து தப்பித்து ஓடி வந்ததை இன்று வரை மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்கின்றனர் இப்படி இருக்கிறவர்   அரசியல் எப்படி சமாளிப்பார் என்ற கேள்வி குறியாக உள்ளது பேசினார்.