இந்த தமிழக வீரர்(சின்ன பொல்லார்ட்) என்று கூறி புகழ்ந்த தள்ளிய சேவாக்.! வைரலாகும் நியூஸ்.

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டி தற்பொழுது 14 வது சீசன் அண்மையில் நடந்தது ஆனால் சிலருக்கு கொரோனா தொற்று பரவியதால் 29 போட்டிகள் இருக்கும் போதே மீதி போட்டிகளை நடத்த வேண்டாம் என பிசிசிஐ சொன்னதை அடுத்து மேட்ச் தேதி இன்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இதுவரை விளையாண்ட இளம் வீரர்களை மற்றும் திறமையான வீரர்களை கண்டறிந்து முன்னாள் கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் அவரது திறமையை பார்த்து புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக்கான் அவர்களைப்பற்றி தற்போது சில கருத்துக்களை எடுத்து வைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் கூறியுள்ளார்.

ஒரு வீரர் நின்ற இடத்திலிருந்தே சிக்சர் அடிக்கும் வல்லமை படைத்தவர்கள் மிகவும் குறைவு அந்த வகையில் பொல்லார்ட்க்கு அடுத்தபடியாக தமிழகத்தில் ஷாருக்கானுக்கு அந்த பவர் இருக்கிறது.

2010ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பொல்லார்ட் களம் கண்டார் அப்போதிலிருந்து தற்போது வரையிலும் பல்வேறு மேட்ச்சை தனியாளாக நின்று மேட்சை மாற்றுகிறார் அதற்கு முக்கிய காரணம் அவர் பந்தை நன்கு கவனித்து அடிப்பதுதான் அதுவும் நின்ற இடத்திலிருந்து நாளா பக்கம் பந்தை சிதற விடுவதால் பவுலர்கள் திணறுகின்றனர்.

அதுபோலவேதான் ஷாருக்கானும் இந்த ஐபிஎல்லில் வந்த உடனேயே சிக்சர்களை பறக்கவிட்டு பவுலர்களுக்கு அச்சுறுத்தினாலும் அதை சிறப்பாக கொண்டு செல்ல அவரால் முடியவில்லை அதற்கு முக்கிய காரணம் அவர் ஆரம்பத்திலேயே அதிரடியை முற்படுவதால் ஷாருக்கான்  விக்கெட்டை பறிகொடுக்கிறார்.

ஷாருக்கான் போட்டியின் தொடக்க விளையாட வந்தால் நீங்கள் ஆவரிடம் இருந்து மிகப் பெரிய ஸ்கோரையும், ஒரு சிக்சர் மொழியை நீங்கள் பார்க்க முடியும். கிரிக்கெட்டை பொறுத்த வரை ஒரு பேட்டிங் ஆடும் போது பந்தை தவறவிட்டு விட்டோம் அதை நினைத்து யோசித்துக் கொண்டிருக்க கூடாது அடுத்த பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டிருக்க வேண்டும் அப்படிப்பட்ட பேட்ஸ்மேன்கள் தான் வெற்றியைப் பெற்று தருவார்கள் என்று ஷாருக்கானை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார்.