திரை உலகில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க இளம் நடிகைகள் போட்டி போடுவது வழக்கம் ஆனால் அது அவ்வளவு எளிதில் கைகூடாது.
இவர்களுக்கு தான் இப்படி என்றால் முன்னணி நடிகர்கள் கூட பல வருடங்களாக ஜோடி சேராமல் சினிமாவில் இருந்து வருவது வழக்கமாக இருக்கிறது.
அப்படி தமிழ் சினிமாவில் பல வருடங்களாக ஹீரோவாக நடித்து வரும் விக்ரம் உடன் இடுப்பழகி சிம்ரன் இதுவரை ஜோடி சேராமலேயே நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்த சிம்ரன் திருமணத்திற்கு பிறகு படிப்படியாக சினிமாவில் இருந்து விலகினார்.
தற்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதை தொடர்ந்து மீண்டும் தற்போது கார்த்திக் சுப்புராஜ் சியான் விக்ரமை வைத்து சியான் 60 திரைப்படத்தை இயக்க உள்ளார் இதில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
இந்த திரைப்படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், வாணி போஜன் மற்றும் தற்பொழுது சிம்ரனும் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறி உள்ளது.
சிம்ரனுடன் விக்ரம் பிதாமகன் திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் அதில் அவர் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தற்போது இவருடன் படத்தில் முழுநேரமும் நடிக்க உள்ளாராம்.
சியான் 60 திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் முதலில் அனிருத்தை வைத்து இசையமைக்க இருந்த நிலையில் அவரை கழட்டி விட்டு மீண்டும் சந்தோஷ் நாராயணன் கைகோர்த்து உள்ளார்.
விக்ரம் கோப்ரா திரைப்படத்தை முடித்துவிட்டு இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.