manisha yadav : சினிமாவை பொருத்தவரை அன்றிலிருந்து இன்று வரை அட்ஜஸ்மென்ட் இருந்து கொண்டு தான் இருக்கிறது, அதிலும் ஒரு மாத காலமாக சிவகார்த்திகேயன் பிரச்சனை தான் பிரபலமாக பேசப்பட்டது அதனைத் தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் முதல் நடிகர் வரை பல விஷயங்களைப் பற்றி பெரியளவு பேசப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அப்படிதான் சமீபத்தில் சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை பூதகரமாக இருந்தது அதனை தொடர்ந்து மன்சூர் அலிகான் திரிஷா விஷயம் சில நாள் ஓடிக் கொண்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் மனிஷா யாதவ் பிரச்சனை மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது இன்று ஹெட்லைன்ஸ் நியூஸ் இவர்கள் நியூஸ் தான் பல பத்திரிகைகளில் நாம் பார்த்துள்ளோம் இதுகுறித்து பத்திரிக்கையாளர் பிஸ்மி சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் அவர் கூறியதாவது சீனு ராமசாமி இடம் பொருள் ஏவல் படத்தின் போது ஷூட்டிங்கில் நடிகை மனிஷா யாதவ் அவர்களுக்கு டார்ச்சர் செய்து வந்ததாக தன்னிடம் அவரே கூறியதாக கூறியுள்ளார் பிஸ்மி.
ஆனால் இந்த வீடியோவை பார்த்த சீனு ராமசாமி உடனே ஊடகத்திற்கு கால் செய்து அந்த வீடியோவை டெலிட் செய்ய செய்துள்ளார் மனிஷா யாதவ் அவர்களிடம் எந்த தவறும் செய்யவில்லை என கூறி நடந்ததை மறைத்தும் பிஸ்மி அவர்களை விமர்சித்தும் பேசினார் அதுமட்டுமில்லாமல் தனக்கு அவர் கால் செய்ததாகவும் அந்த அழைப்பை ஏற்கவில்லை எனவும் பிஸ்மி தெரிவித்திருந்தார் இந்த நிலையில் மனிஷா யாதவ் தன்னுடன் அடுத்த படத்திலும் நடிப்பார் என்று ட்விட்டரில் ஒரு அதிரடி பதிவை வெளியிட்டார் சீனு ராமசாமி.
இப்படி இருக்கும் நிலையில் திடீரென பிஸ்மி சீனு ராமசாமி செய்த வேலையை சொல்கிறேன் என ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில் மனிஷா யாதவ் அவர்களுக்கு அடுத்த படத்தில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளார் ஆனால் அதனை மனிஷா யாதவ் நிராகரித்துள்ளார். அதற்கு காரணம் இடம் பொருள் ஏவல் திரைப்படத்தின் பொழுது அவர் தனக்கு கொடுத்த கசப்பான சம்பவம் தான் அதனை தன்னால் மறக்க முடியவில்லை என பிஸ்மி மனிஷா யாதவ் குறித்து பேசி உள்ளார்.
அதேபோல் மனிஷா யாதவ் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க காரணம் அவரின் நரி தந்திரம் பிஸ்மி சொன்ன அனைத்தும் பொய் அப்படி எதுவும் நடக்கவில்லை என மக்களை நம்ப வைக்கவே இப்படி ஒரு முயற்சியை செய்துள்ளார் மனிஷா யாதவ் அவர்களும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் சீனு ராமசாமி போன்ற வெறி பிடித்தவர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்று தான் இந்த விஷயத்தை கூறினேன் அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் கிடையாது.
அதுமட்டுமில்லாமல் அவர் தனக்கான தடையத்தை அழிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறார் எனக்கு அவர் படங்களின் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது அதே நேரம் படைப்பு மற்றும் யோக்கியமாக இருந்தால் பத்தாது அவரும் யோக்கியமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.