விஜய் ஆண்டனிக்கு பதிலடி கொடுத்த சீமான்.! வடகென்ஸ் குறித்து கேள்வி எழுப்பிய அசீம்..

seeman
seeman

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிசியாக இருந்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவரும் படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது பொதுவாக இவர் சமூகத்திற்கு நல்ல கருத்தினை கூறும் வகையில் அமையும் கதைய அம்சமுள்ள படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது இதனை தொடர்ந்து தற்பொழுது இவருடைய நடிப்பில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வரும் நிலையில் விரைவில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சில வாரங்களுக்கு முன்பு வடகன்ஸ் குறித்து டுவிட் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதாவது சில மாதங்களாக வடகன்ஸ் இந்தியா நோக்கி படையெடுத்து வருகிறார் எங்கு பார்த்தாலும் பெரும்பாலும் வடகர்களுக்கு தான் வேலை வாய்ப்புகள் அதிகமாக கிடைத்து வருகிறது. இதனால் தமிழர்களுக்கு பெரிதாக வேலை கிடைக்கவில்லை எனவே வடகன்ஸ் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என பலரும் போராடி வருகிறார்கள்.

குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் வேலை செய்து வருவதால் முதலாளிகளும் தங்களுடைய லாபரத்திற்காக இவர்களைப் போன்றவர்களை அதிகமாக வேலைக்கு சேர்த்துக் கொள்கின்றனர். எனவே இந்திய மக்கள் பலரும் வேலை இல்லாமல் கஷ்டப்படும் நிலமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வடக்கனாக இருக்கட்டும், மேற்னாக இருக்கட்டும், கிழக்கனாக இருக்கட்டும் , தெற்கனாக  இருக்கட்டும் எல்லாருமே இங்க வாழ வந்தவங்க தான் அப்படி இருக்கும் பொழுது ஏன் அவர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்பது போன்று பதிவிட்டிருந்தார்.

சமீபத்தில் பிக்பாஸ் அசிம் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை பேட்டி எடுக்கும் பொழுது இது குறித்து கேள்வி எழுப்ப அதற்கு அவர் நீங்கள் இசையமைப்பதாக இருந்தாலும், படம் எடுப்பதாக இருந்தாலும் அங்கு போய் பண்ணுங்க எனக் கூற உடனே அரங்கத்தில் கர ஓசை ஒலிக்கிறது. பிறகு புரிதல் இல்லாமல், ஒரு தேசிய இனம் என்றால் என்னன்னு தெரியாமல், அதனுடைய நிலப்பரப்பு என்றால் என்ன, மொழி என்றால் என்னன்னு தெரியாமல், தாய் நிலம்னா என்ன என்று தெரியாமல் சிலர் மேதாவி தனமாக இவ்வாறு பேசுவதினை வைத்திருக்கிறார்கள் என கூறியுள்ளார்.