தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் அசுரன் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி, சூரியை வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் விடுதலை இந்த படம் போலீசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையை படமாக காண்பித்திருந்தனர்.
படம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சூப்பராக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றிகாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது அதன் காரணமாக வசூலிலும் எந்த குறையும் இல்லை இதுவரை மட்டுமே 30 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருக்கிறதாம்..
தொடர்ந்து இந்த படம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் மற்றும் ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களையும் விடுதலை படம் கவர்ந்து இழுத்து உள்ளது அண்மையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்துவிட்டு வெற்றி மாறனை வாழ்த்தினார். சீமான், திருமாவளவன் போன்றவர்களும் இந்த படத்தை பார்த்துவிட்டு வெற்றி மாறனை புகழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலைமையில் சீமான் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வெற்றிமாறன் குறித்து புகழ்ந்து பேசினார் அதில் அவர் சொன்னது பாலச்சந்தர் மகேந்திரன் பாரதிராஜா என தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த உழைப்பாளிகள் இருந்தனர். அந்த வரிசைகள் ராம், வெற்றிமாறன் போன்றவர்கள் சிறந்த படங்களை கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள் அவர்களை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
விடுதலை போன்ற ஒரு திரைப்படத்தை எடுக்க கடும் உழைப்பை கொட்ட வேண்டும் அதனை வெற்றிமாறன் செய்துள்ளார் காட்டுக்குள் பயணித்து மலையேறி கடும் உழைப்பை கொடுத்திருக்கிறார் மனித வடிவில் இருக்கும் மிருகம் அவர் அதனால் தான் அந்த வெறியில் அவர் படத்தை எடுத்திருக்கிறார் இது பாராட்டத்தக்க விஷயம் என சீமான் பேசியிருந்தார்.