இப்பவே மாத்திக்கங்க இல்லன்னா பிரச்சனைல முடியும்.? லியோ திரைப்படம் குறித்து ஆவேசமாக பேசிய சீமான்

leo
leo

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து “லியோ” திரைப்படத்தில் இரவு / பகல் பார்க்காமல் நடித்து வருகிறார் முதல் கட்ட சூட்டிங் சென்னையில் முடிந்ததை அடுத்து தனி விமானத்தின் மூலம் படக்குழு காஷ்மீர் சென்றது அங்கு கடும் குளிர் என்று கூட பார்க்காமல் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறதாம்.

படத்தில் விஜயுடன் கைகோர்த்து அர்ஜுன், சஞ்சய் தத் மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், திரிஷா, பிரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி மற்றும் பலர் நடித்து வருகின்றனர் இதுவரை கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் போன்றவர்களின் காட்சிகள் மட்டுமே நிறைவடைந்து உள்ளதாம். மற்றப்படி அனைவரும் விறுவிறுப்பாக லியோ படத்தில் நடித்து வருகின்றனர்.

இப்பவே படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படம் குறித்து பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான சீமான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். சீமான் அவர்கள் செஞ்சமர் படத்தின் துவக்க விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது  அதில் கலந்து கொண்டார்.

அப்பொழுது பேசிய சீமான் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை நெடுந்தொடராக எடுக்க வேண்டும் என நானும், இயக்குனர் வெற்றிமாறனும் பேசி இருக்கிறோம் ஒரு நாள் நடக்கும் ஆனால் தற்பொழுது அதற்கான அரசியல் சூழல் மற்றும் பொருளாதார சூழல் இல்லை மக்களுக்கான நலத்திட்டங்களை செய்ய காசு இல்லை என்கிறார்கள் ஆனால் தேர்தல் வந்துவிட்டால் மட்டும் எங்கிருந்துதான் இந்த காசு வருகிறது என தெரியவில்லை மக்களின் நினைத்தால் பாவமாக இருக்கிறது என பேசினார்.

தொடர்ந்து சீமானிடம் செய்தியாளர்கள் லியோ பட டைட்டில் குறித்து கேட்டதற்கு தமிழர்கள் தானே படம் பார்க்கிறார்கள் நாம் தான் நம் தாய் மொழியை சிதையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அந்த பொறுப்பு நடிகர் விஜய்க்கு உண்டு.. முன்பு தமிழில் பட பெயர்கள் வெளியிட்டன.. தற்பொழுது பிகில், பீஸ்ட் என பெயர்கள் வருகின்றன அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.