முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விருமன். இந்த திரைப்படம் நேற்று கோலாகலமாக திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து அதிதி ஷங்கர், சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், மனோஜ், சிங்கம் புலி, சூரி, மைனா நந்தினி மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
படம் தற்பொழுது மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்துள்ளதால் கூட்டம் கூட்டமாக திரையரங்கில் இந்த படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். விருமன் திரைப்படம் முதல் நாள் மட்டுமே சுமார் 8 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. வருகின்ற நாட்களிலும் பெரிய படங்கள் எதுவும் வெளி வர இல்லாததால் விருமன் திரைப்படம் நல்லாவே கல்லா கட்டும் என தெரிய வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்து கார்த்தி தனது விருமன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்பொழுது ரசிகர் ஒருவர் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை நாங்கள் திரையில் பார்த்தபோது மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருந்தது இது உங்களுக்கு எப்படி இருந்தது என கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த கார்த்தி சூர்யா ரோலக்சை பார்த்துவிட்டு எனக்கு வருத்தமாக இருந்தது ஏனென்றால் எனக்கு தெரியும் விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று அதனால் திரையில் பார்க்கும் பொழுது அந்த முழு சர்ப்ரைசை உணர முடியவில்லை.
அதுவே எனக்கு தெரியாமல் இருந்திருந்தால் நானும் சக ரசிகனாக அந்த படத்தை பார்த்திருப்பேன் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை நான் கொண்டாடியிருப்பேன் அந்த வகையில் எனக்கு சிறிய கோபமே, மேலும் அது எப்படி நீ ஒத்துக்கிட்ட என சூர்யா கிட்ட கேட்டேன் சும்மா செஞ்சு பாக்கலாம்னு தோணுச்சு செஞ்சிட்டேன் அவ்வளவுதான் என கூலாக பதில் அளித்ததாக கூறினார்.