தன் மகள் அழுவதை பார்த்து “பிரபல இயக்குனருக்கு” வாய்ப்பு கொடுத்த விஜய்.! அந்தப் படம் எது தெரியுமா.?

Vijay

Vijay : தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருக்கும் தளபதி விஜய். இவர் தொடர்ந்து இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை கொடுக்க காரணம் இருக்கிறது. ஒரு இயக்குனரின் படங்கள் சிறப்பாக இருந்து விட்டால் இவரை நேரடியாகவோ அல்லது தனது தரப்பினரை அனுப்பு அந்த இயக்குனரிடம் சென்று ஒரு படம் பண்ணலாமா என்று கேட்பது வழக்கம்.

அப்படி தான் தன்னுடைய பொண்ணுக்காக விஜய் வேலாயுதம் படத்தில் நடித்துள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. தமிழில் மோகன் ராஜா தனது தம்பி ஜெயம் ரவியை வைத்து தான் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வந்தார். அப்படி ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான சந்தோஷ் சுப்பிரமணியம் படம்..

வெளிவந்து  மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று நன்றாக ஓடியது. இந்த படத்தை நடிகர் விஜயின் மகள் திவ்யா பார்த்துவிட்டு கண்கலங்கி அழுதாராம் அதை பார்த்த விஜய் அந்த இயக்குனருடன் படம் செய்ய வேண்டும் என முடிவு செய்து கால் உங்கள் படத்தில் நடிக்கிறேன் சொல்லிவிட்டாராம்.

வேலாயுதம் படம் தெலுங்கு படமான ஆசாத்தின் இன்ஸ்பிரேஷன் என மோகன் ராஜா கூறிய பொழுது என்னால் அப்படி நடிக்க முடியுமா என விஜய் கூறினாராம் நீங்க செய்றீங்க..நான் மாற்றி தரேன் என விஜயிடம் திரை கதையை சொன்ன பொழுது அசந்து போய் எழுந்து கைதட்டினாராம்.

Actor Vijay
Actor Vijay

அந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் இருந்து அடுத்தடுத்து என் இயக்கத்தில் வரும் எல்லா படைப்புகளுக்குமே விஜயிடம் இருந்து கால் வரும் தனி ஒருவன் 2 முடித்துவிட்டு அவரிடம் மீண்டும் சொல்வேன் என இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.