தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது தனது 61வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். முதல் மற்றும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு புனேவில் தொடங்கப்பட இருக்கிறது.
அஜித்தும் அனைத்து வேலைகளையும் வெற்றி கரமாக முடித்துவிட்டு மூன்றாவது கட்ட ஷூட்டிங்கில் வெகு விரைவில் கலந்து கொள்வார் என தெரிய வருகிறது. ஏ கே 61 படத்தில் அஜித் உடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய் மற்றும் கே ஜி எஃப் படத்தில் நடித்து அசத்திய பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படம் இப்படி போய் கொண்டு இருக்க அஜித் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் தற்போது பெரிய அளவில் பேசப்படுகிறது. சினிமா உலகில் பல படங்களுக்கு பைனான்ஸ் உதவி செய்து வருபவர் அன்புச் செழியன். தற்போது இவரது வீடு மற்றும் பல முக்கிய இடங்களில் வருமான வரித்துறையினர் ரைடு நடத்தி வருகின்றனர். அந்த விவகாரம் பெருசாக இருக்க சில வருடங்களுக்கு முன்பு அன்புச் செழியன் மற்றும் அஜித்திற்கும் இடையே நடந்த மோதல் தற்போது பெரிய அளவில் பேசப்படுகிறது.
பாலா இயக்கத்தில் நான் கடவுள் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தான். அட்வான்ஸ் தொகை கொடுத்து புக் செய்தனர் ஆனால் கடைசி நேரத்தில் அஜித்தை தூக்கி விட்டு வேறு ஒரு நடிகரை புக் செய்தனர் இதனால் அஜித்திடம் அந்த பணத்தை வாங்க ஒரு ரூமுக்கு அழைத்து நடுவில் அஜித்தை உட்கார வைத்து அட்வான்ஸ் தொகை இல்லாமல் வட்டியையும் சேர்த்து கொடுக்க வேண்டும் என மிரட்டி உள்ளனர்.
கோபப்பட்ட அஜீத் பக்கத்திலிருந்து சேரை உதைத்து நான் இந்த படத்தில் கமிட் ஆகி நடிக்க தான் பார்த்தேன் எனக்கு பதிலாக நீங்கள் வேறு யாரையோ நடிக்க வைத்து விட்டீர்கள் அப்படி இருக்கையில் நான் ஏமாற்றவில்லை உங்களுக்கு எப்படி அட்வான்ஸ் இல்லாமல் வட்டி போட்டு தர முடியும் அட்வான்ஸ் மட்டும் தான் தருவேன் அதுவும் இன்று இரவே தந்து விடுகிறேன் என கூறி அங்கிருந்து போனாரு அவர் சொன்னபடியே அன்று இரவே மற்ற ஆட்களை வைத்து அந்த அட்வான்ஸ் தொகையை கொடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. அப்படி வேறு எதுவும் அங்கு நடக்கவில்லை மேலும் அஜித் அங்கு தாக்கப்படவில்லை எனவும் பலரும் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளனர்.