தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 230 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார்.
இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் அஜித்தின் பிறந்தநாள் மே 1 -ம் தேதி அறிவிக்கப்பட்டது தற்பொழுது முதல் கட்ட ஷூட்டிங்கிற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை முடித்துவிட்டு அஜித் மிகப் பெரிய ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது அதை முடிந்து விட்டு தான் தனது 63வது திரைப்படத்தில் அஜித் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் உலக நாயகன் கமலஹாசன் அஜித் குறித்து 2006 ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் பேசியது தற்போது வைரலாக்கி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. வரலாறு படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது இதை பார்த்த கமலஹாசன் அஜித் குறித்து பேசியது.. வரலாறு படம் பார்த்தேன் நன்றாக இருந்தது மீண்டும் அஜித்தை கோலிவுட் ரேஸில் பார்த்தது மகிழ்ச்சி, அவரது நடிப்பு குறிப்பாக அந்த பெண்மை மற்றும் சைக்கோவாக நடித்திருந்தது.
என்னை கவர்ந்தது என்னுடைய ஆரம்ப கால படங்கள் எனக்கு ஞாபகம் வந்தன அஜித் பரிசோதனை முயற்சியில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வரலாறு படத்தில் நடிக்க ஆரம்பத்தில் நான் தயங்கினேன் அஜித் அதிர்ஷ்டசாலி அந்த வாய்ப்பை பிடித்து விட்டார் கோலிவுட் தான் சாகவில்லை என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார்.
அவர் விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டார் என்பதை நான் அறிவேன் அஜித்தை பாராட்டுகிறேன். அஜித், என் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் அவர் ரசிகர்களின் இதயத்தை கவரும் வேலையை செய்வார் என நான் நம்புகிறேன் ஆனால் அது நான் மற்றொரு அஜித்தாக இருந்தால் மட்டும் சாத்தியம் என கமலஹாசன் பேசியிருந்தார்.