அவரை ஸ்கிரீன்ல பார்த்தாலே உற்சாகம் தான்.. அஜித்தை பற்றி பேசி மெய்சிலிர்க்க வைத்த ஜெயிலர் பட நடிகர்.!

Ajith
Ajith

Ajith : ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம். படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து விநாயகன், மோகன்லால், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா, டோகி பாபு மற்றும் பலர் நடித்து உள்ளனர்.

படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி  உலகம் முழுவதும்  நாலாயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டு வருகிறது இதுவரை மட்டுமே 550 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.  வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் குறைய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயில் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ள சிவராஜ்குமார் தொடர்ந்து பல நடிகர் நடிகைகளை பற்றி பேசி வருகிறார். அண்மையில் ரஜினியை பற்றி இவர் பேசியது பெரிய அளவில் வைரலானது தொடர்ந்து தற்போது நடிகர் அஜித்குமார் பற்றியும் அவர் பேசியுள்ளார் அவர் சொன்னது.

அஜித் குமார் உடன் நடிக்க இன்னும் வாய்ப்பு வரவில்லை அவர் ஒரு பெரிய ஸ்டார், இந்தியாவிலேயே மிகப்பெரிய நடிகர் எனக்கு அவரை திரையில் பார்த்தாலே பிடிக்கும் அவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் அப்படி இருக்கும் என பேசினார் சிவராஜ்குமார் முன்னதாக பேட்டி ஒன்றில் கூட தனக்கு அஜித்துடன் நடிக்க ஆசை இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப் பார்த்த ரசிகர்கள் கோடான கோடி ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களுக்கு பிடித்த ஹீரோவாக அஜித் இருப்பதாக கூறி இந்த செய்தியை பரப்பி வருகின்றனர்.  மேலும் செப்டம்பர் மாதம் அஜித்தின் விடாமுயற்சியை படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.