ஒரு நிகழ்ச்சி சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் நடைபெற முக்கிய காரணம் தொகுப்பாளர்களே ஆவார். தொகுப்பாளர்கள் ஆக்டிவாக தனது காமெடி கலந்த பேச்சினை மக்கள் மனதில் செலுத்தினால் தான் அந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும். அப்படிப்பட்ட தொகுப்பாளர்களில் முன்னணி தொகுப்பாளினியாக விளங்குபவர் விஜே அர்ச்சனா ஆவர்.
இவர் முதலில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெஸ்ட் தொகுப்பாளினியாக விருதுகளும் வாங்கினார். ஜீ தமிழ் தொலைக்காட்சியிலே இவரும் இவரது மகள் ஜாராவும் சேர்ந்து சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள் அந்த நிகழ்ச்சி செம ஹிட் அடித்தது. பின்பு விஜய் டிவி தொலைக்காட்சியில் அர்ச்சனாவிற்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸ் வீட்டில் மக்கள் மற்றும் ரசிகர்களைக் கவர அவர் அன்பு ஜெயிக்கும் என்ற ஆயுதத்தை எடுத்தார் அனைவரிடமும் அன்பாக இருப்பது போல் தன்னை காண்பித்துக் கொள்டார். ரியோ, நிஷா, சோமு, கேபி போன்றவர்களை அவர் கேங்கில் சேர்த்துக்கொண்டு ஆரிக்கு எதிராக செயல்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாய்ப்புகள் ஏதுவும் கிடைக்கவில்லை.
அதனால் விஜய் டிவி தொலைக்காட்சியலே மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை அர்ச்சனா மற்றும் மா கா பா இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் இடையிலே அர்ச்சனாவிற்கு மூளையில் திடீரென சர்ஜரி நடக்க இருந்தது அதனால் அவருக்கு பதிலாக மணிமேகலை அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது மீண்டும் அர்ச்சனா இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக வந்துவிட்டார் என தெரிகிறது.
எப்படி என்றால் இந்த நிகழ்ச்சியில் சில பிரபலங்கள் தங்களது நிஜ வாழ்க்கை துணையுடன் இதில் கலந்து கொண்டு உள்ளார்கள். இந்த நிகழ்ச்சி மிகவும் ஜாலியாகவும் மற்றும் கொஞ்சம் கடுமையான போட்டி களுடனும் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கும் ஜேக் அண்ட் ரோஸ் அவர்கள் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் அர்ச்சனாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அர்ச்சனா இஸ் பேக் என பதிவு செய்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்.