பொன்னியின் செல்வன் படம் குறித்து ட்வீட் போட்ட இயக்குனர் ஷங்கர் – என்ன சொல்லியுள்ளார் பாருங்கள்..

ponniyin-selvan
ponniyin-selvan

சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மக்கள் மற்றும் ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களையே திரையரங்கு பக்கம் இழுக்கும் அந்த வகையில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்திருக்கிறார் இந்த படம் ஒரு வரலாற்று கதை..

என்பதால் மக்கள் மற்றும் ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களும் பார்க்க அதிகம் ஆர்வம் காட்டினர். படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் தாண்டி சினிமா பிரபலங்களும் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். மேலும் நல்ல விமர்சனங்களை கொடுத்து வந்ததால் இந்த படத்தின் வசூலும் நாளுக்கு  நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இதுவரை மட்டுமே பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் சுமார் 270 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது போகின்ற நிலைமையை பார்த்தால் 500 கோடியை அசால்டாக தொட்டுவிடும் என தெரிய வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் மவுசு குறையாமல் இருப்பதால் ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் கூட தள்ளிப் போய் விடுகின்றன.

அந்த வகையில் இந்த வாரம் வெளியாக வேண்டிய காபி வித் காதல், பார்டர், காசேதான் கடவுளடா, சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்கள் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பொன்னியின் செல்வன் படம் தொடர்ந்து வெற்றியை பெற்று வருகிறது இப்படி இருக்கின்றன நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தை பார்த்துவிட்டு சில கருத்துக்களை சொல்லி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

‘பொன்னியின் செல்வன் வசீகரிக்கிறது. பல ஆண்டுகளுக்கு பின்னர் தமிழில் ஒரு தரமான வரலாற்று படம். ஃபிலிம் மேக்கிங்கில் தான் ஒரு கிங் என மீண்டும் நிரூபித்து இருக்கிறார் மணிரத்தினம். அழகாக காட்சிப்படுத்தி உள்ள ரவி வர்மனுக்கு தலை வணங்குகிறேன் ஏ ஆர் ரகுமானின் இசை இனிமையாக உள்ளது 3:00 மணிநேர சூழ்ச்சிக்குள் நிறைந்த கதை கவர்ந்திழுக்கும் வண்ணம் உள்ளது இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க படத்தை கொடுத்த பிரம்மாண்ட குழுவுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.