தமிழ் சினிமாவில் கேப்டன் என்றாலே நமக்கு முதலில் தோன்றுபவர் விஜயகாந்த் இவர் 80 ,90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக விளங்கினார் இவர் நடிக்கும் காலகட்டத்தில் கமல், ரஜினி போன்ற மிகப் பெரிய ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் நடித்து இருந்தாலும் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் அவர்கள் எல்லாம் நடுநடுங்க வைத்தவர் விஜயகாந்த் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இவர் தமிழ் சினிமாவில் பல சாதனைகளை செய்து உள்ளார் என்றே கூற வேண்டும் அதிலும் குறிப்பாக அவருடைய வருடத்தில் பதினெட்டு படங்களில் நடிப்பு பெயர் பெற்றார் இதுவரையிலும் இதை யாராலும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இப்படி சிறப்பாக வந்து கொண்டு இருந்த இவர் பின்னாள்களில் அரசியல் பிரவேசம் கண்டு தற்போது முழு அரசியல்வாதியாக மாறி உள்ளார்.
இவர் ஆரம்ப காலத்திலிருந்தே அரசியலில் படங்களை அதிகம் தேர்ந்தெடுத்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் பிரவேசம் கண்ட இவரை கருப்பு எம்ஜிஆர், கேப்டன் என செல்லமாக அழைத்து வந்தனர் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள். இதுவரையிலும் தமிழ் சினிமாவில் 156 படங்களில் நடித்துள்ளார் இவர் இதுவரை
தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழிகளிலும் நடித்தது கிடையாது அப்படி நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் அதனை எல்லாம் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த நாயகன் லிஸ்டில் விஜயகாந்தும் ஒருவர் இவர் பெரும்பாலும் போலீஸ் அதிகாரி ,அரசியல், சமூக சேவை போன்ற கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து வலம் வந்தார் இவர் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.
இவர் தமிழ் சினிமாவில் 1976ம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படத்தின் வாய்ப்பை கொடுத்தவர் எஸ் ஏ சி தான். முதல் படத்திற்காக விஜயகாந்த் எடுத்துக்கொண்ட போட்டோஷட் தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.