90 கிட்ஸ்க்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி தற்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.! என்ன வேலை செய்கிறார் தெரியுமா.?

swarnamalya
swarnamalya

சின்னத்திரை தொலைக்காட்சி ஆரம்பத்திலிருந்தே சீரியல்களில் எப்படி நல்லதொரு வரவேற்பு இருந்ததோ அதே போல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிக்கும் நல்லதொரு வரவேற்பு இருந்தது என்று கூற வேண்டும் ஆரம்ப காலங்களில் மக்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவை அதிக அளவில் பெற்று வைத்தவர்தான் ஸ்வர்ணமால்யா.

இவர் பிரபல சின்னத்திரை தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான பெப்ஸி உங்கள் சாய்ஸ், நீங்கள் கேட்ட பாடல் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி 90 கால கட்டங்களில் உள்ள இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்தார். இப்படி சின்னத்திரையில் பிரபலமடைந்த இவருக்கு வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே என்ற திரைப்படத்தில் ஷாலினிக்கு தோழியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படமே அவர் வெள்ளித்திரையில் நடித்த முதல் திரைப்படமாகும் திரைப்படத்தைத் தொடர்ந்து தமிழில் அவர் எங்கள் அண்ணா, மொழி போன்ற படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை தொடர்ந்து அவர் சின்னத்திரையிலும் ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த இவர் ஒரு காலகட்டத்தில் முழுவதுமாக மீடியா உலகை தவிர்த்து தனக்கு விருப்பமான நடனத்தை அதிகமாக பின்பற்றத் தொடங்கினார்.

இது குறித்து பேசிய ஸ்வர்ணமால்யா எனக்கு சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது தான் ஆர்வம் ஒரு காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதனை ஏற்று நான் ஒரு சில படங்களில் நடித்து ஒரு சில நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டேன் இருப்பினும் தற்போது எனக்கு நடனத்தின் மீது அதிக ஆர்வம்.

நல்ல நேரம் நல்ல சமயம் வரும்போது கண்டிப்பாக மீண்டும் நான் சினிமாவில் நடிப்பேன் என கூறினார். அவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.