ஆர்யாவுக்கு எதிரியாக சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்த வேம்புலி தற்பொழுது எப்படி உள்ளார் பாருங்க.!

vembuli
vembuli

தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர்களில் ஒருவர் தான் பா ரஞ்சித் இவரது இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை இந்த திரைப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் ரசிகர்களுக்கும் பிடித்த மாதிரி இயக்கிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

முக்கியமாக இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் அது ஆர்யா தான் இந்த திரைப்படத்திற்காக தனது உடல் எடையை சுத்தமாக குறைத்து பார்ப்பதற்கு குத்துச்சண்டை வீரர் போலவே காட்சி அளிப்பார் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் பசுபதி,கலையரசன்,John Kokken, துஷாரா விஜயன் போன்ற ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பிரபலங்கள் நடித்ததால் படம் மிகவும் பெரிய அளவில் சாதனை படைத்து விட்டது.

பொதுவாகவே இந்த திரைப்படம் முழுவதும் குத்துச்சண்டை வீரர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இதில் ஆர்யாவுக்கு எதிரியாக நடித்து அசத்தியவர் தான் John Kokken இவர் இந்த திரைப்படத்தில் தனது உடல் எடையை குறைத்து பார்ப்பதற்கு முழு குத்துச் சண்டை வீரராகவே மாறினார் மேலும் இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பையும் பார்த்து ரசிகர்கள் பலரும் பாராட்டி விட்டார்கள்.

இவர் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடித்துவிட்டார் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கப் போவதாகவும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இவர் தனது சிறு வயதில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.ஆம் இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு அடையாளம் தெரியாமல் மிகவும் சிறுவயதில் இருக்கிறார் அப்போது எடுத்த புகைப்படத்தை இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.