தீனா படத்தில் நடித்த லைலா தற்பொழுது எப்படியுள்ளார் பாருங்கள்.! வைரலாகும் புகைப்படம்.

laila
laila

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களில் நடித்தாலும் அத்தகைய படங்களின் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தவர் லைலா. இவர் கள்ளழகர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் சிறப்புக்குரிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் வெகு விரைவிலேயே வளர தொடங்கினார்.

அதோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கும் அஜித் சூர்யா விக்ரம் சரத்குமார் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். மேலும் முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் அளவிற்கு மாறிப்பனார் லைலா இப்படி சினிமா உலகில் எதை எடுத்தாலும் வெற்றியை பெற்று வலம் வந்து கொண்டிருந்த லைலா.

பல நாட்களாக காதலித்து வந்த தொழில் அதிபரை 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகினார்.தற்பொழுது  லைலாவுக்கு  2 மகன்கள் உள்ளனர். தற்பொழுது சினிமா உலகில் நடிக்காமல் இருந்து வந்தாலும் சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் இவர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது அத்தகைய படத்தை பார்த்த ரசிகர்கள் லைலாவா இப்படி மாறி உள்ளார் என புகைப்படத்தை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

laila
laila