நடிகர் கார்த்தி உதவி இயக்குனராக பணியாற்றிய போது எப்படி இருந்திருக்கிறார் பாருங்கள்.!

karthi
karthi

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தலிருந்து இப்பொழுது வரையிலும் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வெற்றி படமாக கொடுத்து வருகிறார் அந்த வகையில் முதலில் பருத்திவீரன் படத்தில் கார்த்தி நடித்து அறிமுகமானார்.

முதல் படத்திலேயே இவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது அதனை தொடர்ந்து நான் மகான் அல்ல, பையா, கைதி, ஆயிரத்தில் ஒருவன், விருமன் என சொல்லிக் கொண்டே போகலாம் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் ஏன் இப்பொழுது கூட இவரது கை வாசம் சர்தார், கைதி 2,  பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் இருக்கின்றன.

இதில் முதலாவதாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. திரை உலகில் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வரும் கார்த்திக்கு மார்க்கெட் அதிகரித்து வண்ணமே இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் கார்த்தி திரை உலகில் முதலில் ஹீரோவாக அறிமுகம் ஆகவில்லை முதலில் உதவி இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அதுவும் உதவி இயக்குனராக பிரபல இயக்குனர் மணிரத்தினத்திடம்  வேலை பார்த்துள்ளார் அப்பொழுது அவர் எப்படி இருக்கிறார் என்பதை வெளிக்காட்டும் வகையில் பழைய புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்  உதவி இயக்குனராக இருக்கும்பொழுது ஆள் கொஞ்சம் வெயிட் போட்டு இருக்கிறீர்கள் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் நடிகர் கார்த்தி உதவி இயக்குனராக இருந்த பொழுது எப்படி இருக்கிறார் என்று..

karthi
karthi