லியோ படத்தில் இருந்து வெளியான சீக்ரெட் தகவல்.? காத்திருந்து ஏமாந்து போன ரசிகர்கள்…

leo
leo

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் பரப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் படமாக்கப்பட்டு வருகிறது. காஷ்மீரில் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனை தொடர்ந்து லியோ திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகவில்லை என்றாலும் அவபோது பல தகவல்கள் இணையத்தில் கசிந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகர் ஒருவர் இந்த படத்தின் சீக்ரெட் அனைத்தையும் சொல்லிவிட்டதாக சில தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் பிரபல கேரளா நடிகரும் இணைந்திருப்பதாக சமீப காலங்களாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.

இது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல சஸ்பென்ஸ்கள் வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. விரைவில் லியோ திரைப்படம் குறித்து அடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் அப்டேட்டிருக்காக காத்திருந்த ரசிகர்கள் தற்போது ஏமாற்றத்தில் இருப்பதாக தற்போது ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதாவது நேற்று தமிழ் புத்தாண்டை கொண்டாடும் விதமாக சில படங்களின் அப்டேட்டுகள் வெளியானது.

அந்த வகையில் லியோ படத்தின் ஏதேனும் ஒரு அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெறும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மட்டும் வெளியிட்டு இருந்தது இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

விரைவில் லியோ திரைப்படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது அது மட்டும் அல்லாமல் விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.