தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி அதன் பிறகு முன்னணி நடிகை அந்தஸ்தைப் பெற்றவர் தான் நடிகை சமந்தா நமது நடிகை தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் சூர்யா விக்ரம் தனுஷ் என அனைவருடனும் ஜோடி போட்டு திரைப்படத்தில் நடித்து விட்டார்.
பொதுவாக சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் பலரும் பிரபல நடிகர்களை காதல் செய்வது வழக்கம் தான் அந்த வகையில் நடிகை சமந்தா நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவ்வாறு அவர்களுடைய திருமணம் மிக கோலாகலமாக நடத்தப்பட்டது.
திடீரென வாழ்க்கையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக மிக குறைந்த காலகட்டத்தில் இவர்கள் விவாகரத்திற்கு ரெடி ஆகி விட்டார்கள். ஆனால் இந்த விவாகரத்து விஷயத்தை மிக பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நமது நடிகை திரைப்படங்களில் நடிப்பதில் மிக அதிக அளவு ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.
இவ்வாறு விவாகரத்துக்குப் பிறகு அவர் நடித்த புஷ்பா மற்றும் காத்து வாக்குல இரண்டு காதல் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை படைத்தது. பொதுவாக நடிகை சமந்தா இணையத்தில் அதிகளவு நேரத்தை செலவிடுவது வழக்கம்தான்.
அந்த வகையில் தன்னுடைய ரசிகர்கள் எந்த அளவிற்கு தங்களுடைய கதையில் எந்த அளவுக்கு மாற்றம் தரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக அவர்களின் கமெண்டுகளை பார்ப்பது வழக்கம் இவ்வாறு அவர்களின் பதிவுகளை பார்க்கும் பொழுது மிக கொடூரமாக பேசுபவர்களைப் பார்த்து விட்டால் இரவு அவர் தூங்க மாட்டாராம்.
இவ்வாறு ரசிகர்கள் வெளியிட்ட ட்ரோல்களைப் பார்த்து நடிகை சமந்தா பல நாட்கள் இரவு தூங்காமல் தவித்தனர் என்பது தெரியவந்துள்ளது.